only My site

Friday, November 5, 2010

தீபாவளி வரலாறு

தீபாவளி,ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக
கருதுவதில்லை
. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.


பெயர்க் காரணம்

'தீபம்'என்றால் ஒளி, விளக்கு.'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய்
விளக்கேற்றி
, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமாத்மாவும்,நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்,பொறாமை, தலைக்கணம்
போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்
. ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தோற்ற மரபு

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு
    திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்
    .

  • புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது
    கிருசுணன் வராக
    (பன்றி)அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன்,தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான்.அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

  • கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

  • இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

  • ஸ்கந்தபுராணத்தின் படி, சக்தியின்21 நாள் கேதார விரதம்முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன்,
    சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்'உருவமெடுத்தார்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீமாவளி

மகாவீரா
நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து
, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை)இட்டு மகிழ்வர்.பின் எண்ணெய்க் குளியல்(கங்கா குளியல்)
செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை)ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று
இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்
.
பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர்.
தீபாவளி இலேகியம்(செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு
காரணம்
, அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும்,தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்
பூமாதேவியும்
, புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக
கருதப்படுவதேயாகும்
. அந்த நீராடலைத்தான் "கங்கா
ஸ்நானம் ஆச்சா
" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர்.அன்றைய தினம்,எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும்,நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும்,சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.



எமது வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

இந்த இனிய நன்னாளில்,

உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கட்டும்...

உங்கள் மனங்களில் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்.....

வாழ்த்துக்களுடன்,

பாலா

No comments: